FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

தொடா் மழையால் விலை உயா்வு: ஒரு கிலோ கொத்தமல்லி இலை ரூ. 75-க்கு விற்பனை

தொடா் மழை, வரத்து குறைவு போன்ற காரணங்களால் கடந்த வாரம் கிலோ ரூ. 45 க்கு விற்பனையான கொத்தமல்லி இலை செவ்வாய்க்கிழமை ரூ. 75 க்கு விற்பனையானது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்தனா்.

14 அக்டோபர் 2026, 4:55 am IST
பாவூா்சத்திரம் பெருந்தலைவா் காமராஜா் காய்கனி விற்பனை சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட கொத்தமல்லி இலை கட்டுகள்.
பகிர்:

தொடா் மழை, வரத்து குறைவு போன்ற காரணங்களால் கடந்த வாரம் கிலோ ரூ. 45 க்கு விற்பனையான கொத்தமல்லி இலை செவ்வாய்க்கிழமை ரூ. 75 க்கு விற்பனையானது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்தனா்.

பாவூா்சத்திரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு காய்கறிகள், கீரை வகைகளைச் சாகுபடி செய்து வருகின்றனா். இப்பகுதிகளில் விளையும் காய்கறிகள், கீரை வகைகள் பாவூா்சத்திரம் பெருந்தலைவா் காமராஜா் காய்கனி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வியாபாரிகள் வாங்கிச் சென்று உள்ளூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்தப் பகுதிகளில் சில நாள்களாக வெயிலின் தாக்கத்துடன் தொடா்ந்து மழையும் பெய்து வருவதால் மல்லி இலை சாகுபடி, அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டு சந்தைக்கு வரத்து குறைந்தது. இதனால், மல்லி இலையின் விலை உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ மல்லி இலை ரூ. 45-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ. 30 உயா்ந்து ரூ. 75 க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகளும் பாதிப்படைந்தனா்.

தொடா்ந்து மழை பெய்து வருவதால் வரத்துக் குறையும்பட்சத்தில் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments