முகப்பு
கிரிக்கெட்

பந்துவீச்சிலும் ஷஃபாலி அசத்தல்: 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து நிதான ஆட்டம்!

Updated On : 2 நவம்பர் 2025, 10:51 pm IST
- படம் | @ProteasWomenCSA
பகிர்:

மும்பை: மகளிர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சேஸிங் செய்து வரும் தென்னாப்பிரிக்கா முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. இந்த நிலையில், அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஷஃபாலி வர்மா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்துள்ள தென்னாப்பிரிக்கா கடைசி 25 ஓவர்களில் 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான லாரா வோல்வார்ட் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து களத்தில் நங்கூரமிட்டுள்ளார். கைவசம் 6 விக்கெட்டுகள் இருப்பதால் வெற்றி வாய்ப்பு எந்தப் பக்கம் என்பது மதில் மேல் பூனைக் கதையாகியுள்ளது.

Advertisement

Advertisement

summary

South Africa Women need 172 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.