டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவீந்திர ஜடேஜா டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவீந்திர ஜடேஜா டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் குவஹாட்டியில் நேற்று (ஏப்ரல் 10) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் மற்றும் 24* ரன்கள் எடுத்தார். இதன் மூலம், டி20 போட்டிகளில் 4000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். டி20 போட்டிகளில் 4000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹார்திக் பாண்டியா தன்வசம் வைத்துள்ளார். அந்த வரிசையில் இரண்டாவது வீரராக ஜடேஜா இணைந்துள்ளார்.
Advertisement
Advertisement
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், டி20 போட்டிகளில் 4000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய 25-வது வீரராக ரவீந்திர ஜடேஜா மாறியுள்ளார்.
கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா, டிரேடிங் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Former Indian team player Ravindra Jadeja has set a new record in T20 matches.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.