FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

4-வது டி20: இங்கிலாந்து அபார வெற்றி; டி20 தொடரையும் வென்று அசத்தல்!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Updated On : 10 ஜூலை 2026, 4:22 pm IST
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பில் சால்ட் மற்றும் ஹாரி ப்ரூக் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி பிரிஸ்டாலில் நேற்று (ஜூலை 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷிவம் துபே 22 ரன்களும், அபிஷேக் சர்மா 16 ரன்களும் எடுத்தனர்.

Advertisement

Advertisement

இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வில் ஜாக்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து!

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 13.5 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பில் சால்ட் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய கேப்டன் ஹாரி ப்ரூக்குக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 11) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

England achieved a magnificent victory by 9 wickets in the fourth T20 match against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments