அதிரடி மன்னர்களை ஒரே ஓவரில் விக்கெட் எடுத்த ஷஷாங் சிங்..! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்!
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களை ஆட்டமிழக்க செய்த ஷஷாங் சிங் குறித்து...
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களை பஞ்சாப் கிங்ஸின் நட்சத்திர பேட்டர் ஷஷாங் சிங் தனது பந்துவீச்சினால் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் லீக் தொடரின் 17ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பஞ்சாப் கிங்ஸ் வீரர்களில் ஓவர்களை அடித்து நொறுக்கினார்கள். அபிஷேக் சர்மாவும் டிராவிஸ் ஹெட்டும் இணைந்து 120 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ஷஷாங் சிங் பந்துவீசி முதலில் டிராவிஸ் ஹெட்டை 38 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து, அபிஷேக் சர்மாவை 74 ரன்களும் எடுத்திருந்த வேளையில் அவரையும் அதே ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார்.
போட்டியின் 9ஆவது ஓவரில் ஷஷாங் சிங் வீசியது: விக்கெட், 1, வைடு, விக்கெட், 0, 1, 0 என 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில், ”பார்ட் டைம் (பகுதி நேர) பந்துவீச்சாளர் அல்ல, பார்ட்னர்ஷிப் பிரேக்கர்” எனக் கூறியுள்ளார்.
Shashank Singh Dismisses the 'Kings of Aggression' in a Single Over! A Twist No One Expected!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.