FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகள் இல்லாத கிரிக்கெட்டினை யோசிக்கவே கடினமாக உள்ளது: ஜான்டி ரோட்ஸ்

ஒருநாள் போட்டிகள் இல்லாத கிரிக்கெட்டினை யோசித்துப் பார்ப்பதற்கே கடினமாக இருப்பதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 8:27 pm IST
ஜாண்டி ரோட்ஸ் (கோப்புப் படம்)
பகிர்:

ஒருநாள் போட்டிகள் இல்லாத கிரிக்கெட்டினை யோசித்துப் பார்ப்பதற்கே கடினமாக இருப்பதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் மிகவும் பிரபலமாகிவிட்டன. டி20 தொடர்களால் டெஸ்ட் கிரிக்கெட் அதன் மதிப்பை இழந்து காணாமல் போய்விடும் எனப் பரவலாகக் கூறப்பட்டது. இருப்பினும், டெஸ்ட் போட்டிகள் அதற்கான முக்கியத்துவத்தை இழக்கவில்லை. ஆனால், மாறாக இருதரப்பு ஒருநாள் தொடர்கள் மிகவும் குறைந்துவிட்டன.

இந்த நிலையில், எதிர்காலத்தில் மிகவும் குறைவான இருதரப்பு தொடர்களே உள்ளதாகவும், ஒருநாள் போட்டிகள் இல்லாத கிரிக்கெட்டினை நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது எனவும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதலில் டி20 கிரிக்கெட் தொடங்கப்பட்டபோது, டெஸ்ட் கிரிக்கெட் மீதான அழுத்தம் அதிகரிக்கப் போகிறது எனக் கூறினார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறையவில்லை. சில டெஸ்ட் போட்டிகள் டி20 கிரிக்கெட்டினைப் போன்று உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் போன்று விளையாடுகிறார்கள்.

என்னைப் பொருத்தவரை, ஒருநாள் கிரிக்கெட் ஆபத்தில் இருப்பதாக நினைக்கிறேன். இனிவரும் காலங்களில் ஒருநாள் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறையலாம். ஒருநாள் போட்டிகளுக்கான ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால், அணிகள் மிகவும் குறைவான இருதரப்பு தொடர்களிலேயே விளையாடுகின்றன. ஒருநாள் போட்டிகள் இல்லாத கிரிக்கெட்டினை நினைத்துப் பார்ப்பதற்கே கடினமாக உள்ளது என்றார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வேவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

summary

Former South African player Jonty Rhodes has stated that it is difficult to even imagine cricket without One Day Internationals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments