FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஷ்யாம் சுந்தர் சதம் விளாசல்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 9:39 pm IST
சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஷ்யாம் சுந்தர் - படம் | டிஎன்பிஎல்
பகிர்:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலில் விளையாடியது.

Advertisement

Advertisement

ஷ்யாம் சுந்தர் சதம் விளாசல்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஷ்யாம் சுந்தர் சதம் விளாசி அசத்தினார். அவர் 57 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கே. ராஜ்குமார் 33 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஜெகதீசன் கௌசிக் 20 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

திருப்பூர் தமிழன்ஸ் சார்பில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இசக்கி முத்து, முகமது அலி, சாய் கிஷோர் மற்றும் மதிவண்ணன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகிறது.

summary

In the TNPL cricket tournament match against iDream Tiruppur Tamizhans, Trichy Grand Cholas batted first and scored runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments