ஜோ ரூட்டும் 66 என்ற சிறப்பு எண்ணும்..! டெஸ்ட்டில் சச்சின் சாதனை சமன்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் நிகழ்த்திய சாதனை குறித்து...
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த சச்சின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 409 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் இங்கிலாந்து அணி 238 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
இந்தப் போட்டியில் ஜோ ரூட் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த அரைசதத்துடன் சச்சின் (68) சாதனையை சமன்செய்துள்ளார். விரைவில் அவரது சாதனையை முறியடித்து உலகின் நம்.1 வீரராக ஜோ ரூட் மிளிருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
ஜோ ரூட்டும் 66 என்ற சிறப்பு எண்களும்
ஜோ ரூட் 66 என்ற எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்துள்ளார். அவர் கேப்டனாக 66ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இந்தப் போட்டியில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வினோதமான அதிசய நிகழ்வை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஜோ ரூட்டுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
Joe Root Joins Sachin Tendulkar at the Top With 66 Test Fifties: Check the Records with special numerical stats
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.