முகப்பு

கடைசி டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறுவாரா?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி குறித்து...

கடைசி டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறுவாரா?
பயிற்சியில் முகமது சிராஜ் - படம்: பிசிசிஐ
பகிர்:

இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் திடலில் நாளை (நவ.27) இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

இந்தப் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அனுபமற்ற அன்ஷுல் கம்போஜ், பிரசித் கிருஷ்ணா பெரிதாக விக்கெட் எடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல் டெஸ்ட்டில் இந்தியா, முதல் இன்னிங்ஸில் 720 ரன்கள் குவித்தது. இரண்டாம் இன்னிங்ஸில் நியூசிலாந்தை ஆட்டமிழக்க செய்ய முடியாமல் சமனில் முடித்துக்கொள்ள ஷுப்மன் கில் ஒப்புக்கொண்டார்.

Advertisement

Advertisement

இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் பும்ராவை விடவும் அதிகம் விக்கெட் எடுத்த மற்றும் அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ் இடம்பெறாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

முகமது சிராஜ் இல்லாதது சரியான முடிவென இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பேட்டி அளித்தார்கள். ஆனால், இந்திய அணியினால் அவர் இல்லாமல் போட்டியில் வெல்லமுடியாமல் போனது.

டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளிலும் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்டவர் முகமது சிராஜ். தொடர் சமனில் இருப்பதால், முக்கியமான நாளைய போட்டியில் சிராஜ் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கெனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி நான்காம் இடத்தில் இருக்கிறது. நாளைய போட்டியிலும் வெல்லாவிட்டால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துவிடும் என்பது நினைவுகூரத்தக்கது.

summary

Final Test: Will Mohammed Siraj be included in India's playing eleven?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.