✕
முகப்பு

முகமது சிராஜை பிளேயிங் லெவனில் சேர்க்காதது ஏன்? முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கேள்வி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முகமது சிராஜ் - படம் | AP
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று (நவம்பர் 19) தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணி நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் அன்ஷுல் கம்போஜ் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். மூத்த வீரரான முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் சேர்க்கப்படாதது குழப்பமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்திய அணி வலுவாக மீண்டு வரும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் இடம்பெறாததை ஒருவரால் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது. அவரது அனுபவம், ஆக்ரோஷம் ஆகியவற்றால் போட்டியை மாற்றக் கூடிய வீரர். அவர் அணியில் இருப்பது அணிக்கு கண்டிப்பாக பலனளிக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

முதல் நாளில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் எடுத்துள்ளது. ஹென்றி நிக்கோல்ஸ் 113 ரன்களுடனும், கிளன் பிலிப்ஸ் 94 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடரை சமன் செய்வதற்கான கடைசி ஆட்டத்தில் முகமது சிராஜ் ஆட்டத்தின் கடைசி நாளில் அபாரமாக பந்துவீசி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

summary

The former head coach has questioned the exclusion of Mohammed Siraj from the Indian playing eleven for the first Test match against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.