FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முகமது சிராஜை பிளேயிங் லெவனில் சேர்க்காதது சரியான முடிவே: பேட்டிங் பயிற்சியாளர்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் முகமது சிராஜை சேர்க்காதது சரியான முடிவு என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

40 வினாடிகள் முன்பு
முகமது சிராஜ் - படம் | AP
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் முகமது சிராஜை சேர்க்காதது சரியான முடிவு என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று (நவம்பர் 19) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் சேர்க்கப்படாதது தவறான முடிவு கிடையாது என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முகமது சிராஜ் மிகவும் சிறந்த பந்துவீச்சாளர். அவர் மீது எந்த ஒரு தவறும் இல்லை. முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்த பிளேயிங் லெவன் மிகவும் சிறந்ததாக இருக்கும் என்பதால் தேர்வு செய்தோம். பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறாதது தவறான முடிவு என நான் நினைக்கவில்லை. இது ஆட்டத்தின் முதல் நாள் மட்டுமே. நாங்கள் ஆட்டத்தின் முதல் நாளுக்காக மட்டும் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில்லை என்றார்.

முகமது சிராஜ் மட்டுமின்றி, முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் மூத்த வீரரான ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெறவில்லை.

முதல் டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அன்ஷுல் கம்போஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய வேகப் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள பிளேயிங் லெவனுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Indian team batting coach Sitanshu Kotak has stated that the decision not to include Mohammed Siraj in the playing eleven for the first Test match against New Zealand was the right one.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.