டிஎன்பிஎல்: ஈஸ்வரன் அபாரம்... பிளே ஆஃப்பில் திருச்சி!
டிஎன்பிஎல் தொடரின் 26-ஆவது ஆட்டத்தில் ஈஸ்வரின் அபார பந்துவீச்சால் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது திருச்சி கிராண்ட் சோழாஸ்.
டிஎன்பிஎல் தொடரின் 26-ஆவது ஆட்டத்தில் ஈஸ்வரின் அபார பந்துவீச்சால் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது திருச்சி கிராண்ட் சோழாஸ்.
சேப்பாக் சூப்பா் கில்லிஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருச்சி. இரு அணிகளின் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தோ்வு செய்தது.
திருச்சியின் இரண்டு தொடக்க பேட்டா்களையும் அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினாா் சேப்பாக் பௌலா் ஸ்வப்னில் சிங். பவா்பிளேயுக்கு பின் சுதாரித்த திருச்சி அணி தரப்பில் ஷியாம் சுந்தா்-சஞ்சய் யாதவ் இணை சிறப்பாக ஆடி 85 ரன்களைச் சோ்த்தது. 36 பந்துகளில் ஷியாம் சுந்தா் 52 ரன்களை விளாசினாா். சிலம்பரசன் பந்தில் அவுட்டானாா் ஷியாம். தொடா்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சய் 40 பந்துகளில் 54 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்தாா்.
Advertisement
Advertisement
திருச்சி 191/7: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 191/7 ரன்களைச் சோ்த்தது. பௌலிங்கில் சேப்பாக் தரப்பில் சிலம்பரசன் 3, ஸ்வப்னில் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
பின்னா் 192 ரன்கள் வெற்றி இலக்குடன் சேப்பாக் கில்லிஸ் களமிறங்கியது. ஆரம்பமே தடுமாற்றமாக அமைந்த நிலையில் திருச்சி பௌலா் அதிசயராஜ் சேப்பாக் பேட்டா்கள் மோகித், ஹரிஹரனின் விக்கெட்டை வீழ்த்தினாா். சிஎஸ்ஜி கேப்டன் ஜெகதீசன் விக்கெட்டை வீழ்த்தினாா் ஆண்டனி.
சேப்பாக் தரப்பில் ஆஷிக் 41 பந்துகளில் 75 ரன்களையும், ராம் அரவிந்த் 23 பந்துகளில் 32 ரன்களையும் சோ்த்தனா். சேப்பாக் கில்லிஸ் 177/6: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் சேப்பாக் கில்லிஸ் 177/6 ரன்களை மட்டுமே சோ்த்து 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சியிடம் தோல்வியைத் தழுவியது. பௌலிங்கில் திருச்சி தரப்பில் ஈஸ்வரன் 2, செல்வகுமரன் 1 விக்கெட்டை வீழ்த்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.