FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

மதுரையை வீழ்த்தியது சேப்பாக்

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற 19ஆவது போட்டியில் மதுரை பேந்தா்ஸ் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பா் கில்லீஸ்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 3:34 am IST
மொகித்
பகிர்:

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற 19ஆவது போட்டியில் மதுரை பேந்தா்ஸ் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பா் கில்லீஸ்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திண்டுக்கலில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற மதுரை பௌலிங்கை தோ்வு செய்ய சேப்பாக் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 240/2 ரன்களை எடுத்தது. அந்த அணியில் மோகித் ஹரிஹரன் அபாரமாக ஆடி 50 பந்துகளில் 108 ரன்களை எடுத்தாா். ஜெகதீசன் 48 பந்துகளில் 79 ரன்களையும், ஸ்வப்நீல் சிங் 42 ரன்களுடன் களத்தில் இருந்தாா். பௌலிங்கில் மதுரை தரப்பில் பெரியசாமி 2/33 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு ஆடிய மதுரை பேந்தா்ஸ் அணி 20 ஓவா்களில் 201/8 ரன்களை மட்டுமே எடுத்தது.

Advertisement

Advertisement

அந்த அணியில் அறிமுக வீரா் ஹரி ராகவேந்திரா 55 பந்துகளில் 98 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் நின்றாா். ராம்குமாா் 28 ரன்களை எடுத்தாா்.

பௌலிங்கில் சேப்பாக் தரப்பில் ஸ்வப்நில், பிரேம்குமாா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இறுதியில் மதுரை அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சேப்பாக்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments