FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மூவர் சதம்: இந்தியாவுக்கு 406 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ. தீவுகள்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் அசத்திய மே.இ. தீவுகள் அணி குறித்து...

சதம் அடித்த மூன்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள். - படங்கள்: ஏபி
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 405/7 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.

டாஸ் வென்ற ஷுப்மன் கில் பந்துவீச முடிவெடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில் அதிரடியான தொடக்கம் அமைத்தார்கள்.

கார்டி 9 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஜான் கேம்ப்பெல் - ஷாய் ஹோப் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து சதம் அடித்து அசத்தினார்கள்.

Advertisement

Advertisement

ஷாய் ஹோப் 104, ஜான் கேம்ப்பெல் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். அடுத்ததாக நம்.4ல் களமிறங்கிய அமிர் ஜாங்கூ அவரது பங்கிற்கும் சதம் அடித்து 114 ரன்களில் ஆட்டமிழந்தார்.

450 ரன்கள் வருமென்ற நிலையில், இறுதியில் இந்திய அணி சிறப்பாக பந்துவீசி 405 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இதில் ஜடேஜா, குல்தீப், குர்னூர் பிரார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

ஆகிப் நபி ஓவரில் குல்தீப் யாதவ் ஒரு கேட்சை தவறவிட்டதால், அவர் விக்கெட் இன்றி தனது அறிமுக போட்டியை முடித்தார். பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் எடுத்தார்.

முதல் போட்டியில் வென்றுள்ள இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்க, இந்தப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

summary

Three Centuries: West Indies sets India a target of 406 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments