இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய மே.இ.தீவுகள் வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் விலகல்!
இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய மே.இ.தீவுகள் வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் 2-ஆவது போட்டியிலிருந்து விலகியுள்ளதைப் பற்றி...
இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் 2-ஆவது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று போட்டிகள் ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
கேரளத்தின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில்லின் அதிரடியான சதத்தால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் அதிரடியாக சதம் விளாசியிருந்தும் அதற்கு பயனில்லாமல் போனது. இன்று (செப். 30) அஸ்ஸாமின் குவாஹாட்டியில் நடைபெறும் 2-ஆவது போட்டியில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் அசத்தலாக விளையாடி சதம் விளாசிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
முதல் ஒருநாள் போட்டியின் போதே ஜஸ்டின் க்ரீவ்ஸுக்கு காலில் தசைநார் கிழிந்து காயம் ஏற்பட்டது. களத்தில் ஓட முடியாமல் திணறிய அவர், போராடி தனது சர்வதேச ஒருநாள் முதல் சதத்தைப் பதிவு செய்தார். மேலும், அவர் 108 பந்துகளில் 101 ரன்கள் குவித்து குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். காயத்தால் அவர் போட்டியில் ஃபீல்டிங்கும் செய்யவில்லை.
தொடரைத் தீர்மானிக்கும் போட்டியில் அதிரடி வீரர் 32 வயதான ஜஸ்டின் க்ரீவ்ஸின் விலகல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குப் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
West Indies face a significant challenge in their must-win second ODI against India as in-form opener Justin Greaves has been ruled out due to a calf injury sustained during his impressive century in the series opener.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.