FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்; வலுவான நிலையில் இந்தியா!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தினார்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:58 pm IST
சதம் விளாசிய மகிழ்ச்சியில் தேவ்தத் படிக்கல் - படம் | பிசிசிஐ
பகிர்:

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தினார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று (ஆகஸ்ட் 15) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்!

Advertisement

Advertisement

டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி 200 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கே.எல்.ராகுலுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். கே.எல்.ராகுல் தசைப்பிடிப்பு காரணமாக 77 ரன்களில் ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 147 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

தேவ்தத் படிக்கல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் களத்தில் உள்ளனர்.

summary

Devdutt Padikkal dazzled by smashing a century in the first innings of the first Test match against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments