மூன்றாவது வீரராக களமிறங்கி சதம் விளாசி அசத்திய தேவ்தத் படிக்கல்; அதே இடத்தில் தொடர்வாரா?
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தினார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தினார்.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று (ஆகஸ்ட் 15) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
3-வது இடத்தில் தொடர்ந்து களமிறக்கப்படுவாரா?
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பின், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் தேவ்தத் படிக்கல். இந்த இணை நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்திருக்கையில் தசைப் பிடிப்பு ஏற்பட்டதால், ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். கேப்டன் ஷுப்மன் கில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 130 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை இவரைச் சேரும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய சித்தேஸ்வர் புஜாரா சதம் விளாசியிருந்தார். அதன் பின், மூன்றாவது இடத்தில் களமிறங்கியவர்களில் ஷுப்மன் கில் மட்டுமே சதம் விளாசியுள்ளார். அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியிருந்தார். அதன் பின், அந்த வரிசையில் தேவ்தத் படிக்கல் இணைந்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஷுப்மன் கில் மூன்றாவது வீரராக களமிறங்கி சதம் விளாசிய பிறகு, இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 19 டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது வீரர் இடத்தில் இந்திய அணி 7 வெவ்வேறு வீரர்களை களமிறக்கியது. ஆனால், அவர்கள் யாருமே ஒரு சதம் கூட விளாசவில்லை.
காயம் காரணமாக விலகிய சாய் சுதர்சனுக்குப் பதிலாக 3-வது இடத்தில் தேவ்தத் படிக்கல் முதல் டெஸ்ட்டில் களமிறக்கப்பட்டார். மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்ட அவர் சதம் விளாசி அசத்தியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடும் தேவ்தத் படிக்கல் அதே இடத்தில் இந்திய அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக உருவாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Devdutt Padikkal dazzled by smashing a century while coming in to bat at number three in the first Test match against Sri Lanka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.