ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தேவ்தத் படிக்கல் முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஷுப்மன் கில்!
ஐசிசியின் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான தேவ்தத் படிக்கல் முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஐசிசியின் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான தேவ்தத் படிக்கல் முன்னேற்றம் கண்டுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி தவரிசை இன்று (செப்டம்பர் 2) வெளியிடப்பட்டது. அதில், இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான தேவ்தத் படிக்கல் ஐந்து இடங்கள் முன்னேறி தவரிசையில் 54-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தேவ்தத் படிக்கல் இரண்டு சதங்கள் விளாசி அசத்தினார். இந்தத் தொடரில் அவர் 328 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், அவர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
Advertisement
Advertisement
இலங்கைக்கு எதிரான தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார். டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த வீரர்கள் தரவரிசையில் இரண்டு இடங்கள் சறுக்கிய ஷுப்மன் கில், 9-வது இடத்தில் உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் 7-வது இடத்தில் உள்ளார். தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தரவரிசையில் 11-வது இடத்தில் தொடர்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷா, தரவரிசையில் 29 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில், வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தரவரிசையில் இரண்டாவது இடத்தை இழந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சிறந்த பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் மிட்செல் ஸ்டார்க்கும், இரண்டாமிடத்தில் மாட் ஹென்றியும் உள்ளனர்.
காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
Devdutt Padikkal, one of the young players of the Indian team, has made progress in the ICC Test player rankings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.