FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேவ்தத் படிக்கல் சதம், ஷுப்மன் கில் அரைசதம்; இந்திய அணி 300 ரன்கள் குவிப்பு!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்துள்ளது.

தேவ்தத் படிக்கல், கேப்டன் ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ
பகிர்:

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல், இரண்டாவது போட்டியிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி அசத்தினார். அவர் 193 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஷுப்மன் கில் 50 ரன்கள், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள், கே.எல்.ராகுல் 18 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லகிரு குமாரா மற்றும் கேஷரா நுவந்தா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

துருவ் ஜுரெல் 7 ரன்களுடனும், சரண்ஷ் ஜெயின் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

summary

In the second Test match against Sri Lanka, the Indian team scored 300 runs for the loss of 5 wickets in their first innings on the opening day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments