தேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று (ஆகஸ்ட் 15) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது.
Advertisement
Advertisement
தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இதனையடுத்து, ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் 162 பந்துகளில் 77 ரன்கள் (9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்திருக்கையில் ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். கேப்டன் ஷுப்மன் கில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். சிறப்பாக விளையாடிய அவர் 178 பந்துகளில் 131 ரன்களுடன் களத்தில் உள்ளார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவருடன் ரிஷப் பந்த் 27 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
In the first innings of the first Test match against Sri Lanka, the Indian team has scored 288 runs for the loss of two wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.