FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இரண்டாவது டெஸ்ட்டிலும் சதம் விளாசி அசத்திய தேவ்தத் படிக்கல்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

சதம் விளாசிய மகிழ்ச்சியில் தேவ்தத் படிக்கல் - படம் | பிசிசிஐ
பகிர்:

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். கே.எல்.ராகுல் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், தேவ்தத் படிக்கல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

Advertisement

Advertisement

இருப்பினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில் அரைசதம் எடுத்தார். அவர் 108 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

மறுமுனையில் தொடக்கம் முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தேவ்தத் படிக்கல், சதம் விளாசி அசத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் 193 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 167 ரன்கள் எடுத்து அசத்திய் தேவ்தத் படிக்கல், இரண்டாவது டெஸ்ட்டிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது இரண்டாவது சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

summary

Devdutt Padikkal, one of the young players of the Indian team, has impressed by smashing a century in the second Test match against Sri Lanka as well.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments