டெஸ்ட் போட்டியில் முதல் சதம் விளாசியது குறித்து மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியது குறித்து தேவ்தத் படிக்கல் மனம் திறந்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியது குறித்து தேவ்தத் படிக்கல் மனம் திறந்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 460 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
Advertisement
Advertisement
நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் 167 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 82 ரன்களும், துருவ் ஜுரெல் 51 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் விளாசியது குறித்து தேவ்தத் படிக்கல் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த தருணத்துக்காக காத்திருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்தேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைத்தேன். இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சதம் விளாசியது உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடும்போது, உங்களிடம் உறுதியான திட்டங்கள் இருக்க வேண்டும். களத்தில் அந்த நேரத்தில் திடீரென சிறப்பாக விளையாடுவது கடினம். பந்துவீச்சாளர்களுக்கு எதிராக உறுதியான சில ஷாட்டுகளை விளையாடி அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். என்னுடைய திட்டங்களில் நம்பிக்கை வைத்து அதனை 100 சதவிகிதம் அர்ப்பணிப்புடன் செயல்படுத்தினேன் என்றார்.
Devdutt Padikkal has opened up about scoring a century in the first Test match against Sri Lanka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.