இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது மிகப் பெரிய சவால்: மே.இ.தீவுகள் கேப்டன்
இந்திய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது மிகப் பெரிய சவால் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது மிகப் பெரிய சவால் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஒருநாள் தொடர் நாளை (செப்டம்பர் 27) தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது மிகப் பெரிய சவால் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது எப்போதும் சவாலானது. இந்திய அணிக்கு எதிரான இந்த கடினமான சவாலை நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். உலகின் சிறந்த அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடவுள்ளோம். அதனால், இந்த தொடரில் விளையாடுவதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளோம்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நாங்கள் இருதரப்பு ஒருநாள் தொடரை வென்றதில்லை. அதனை உத்வேகமாக எடுத்துக் கொண்டு இந்தத் தொடரை எதிர்கொள்கிறோம். இந்தத் தொடர் மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.
West Indies captain Shai Hope has stated that playing against the Indian team on their home soil is a huge challenge.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.