FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தோனியின் அறிவுரை வெற்றிக்கு உதவியது: ஷாய் ஹோப்

ஆட்ட நாயகன் விருது வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பேசியிருப்பதாவது...

எம்.எஸ். தோனி, ஷாய் ஹோப் - படங்கள்: ஏபி
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப், “தோனியின் அறிவுரை உதவியது” எனக் கூறினார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. 50 ஓவர்களில் 351/7 ரன்கள் குவித்தது. இதில் கே.எல். ராகுல் 129 ரன்கள் குவித்தார்.

அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 48.2 ஓவர்களில் 352/4 ரன்கள் எடுத்து அபாரமான ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இந்தியா 2-1 என தொடரை வென்றது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் ஷாய் ஹோப் 143 பந்துகளில் 162 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு அவர் பேசியிருப்பதாவது:

ஒருமுறை தலைசிறந்த மனிதர் எம்.எஸ். தோனியிடம் பேசினேன். அப்போது அவர் என்னிடம், ‘நீ நினைப்பதை விட உனக்கு அதிகமான நேரம் இருக்கிறது. அது என்னக்குள் அப்படியே தங்கிவிட்டது. அதனால், இறுதி முடிவில் கவனம் செலுத்தாதே. செயல்முறையில் கவனம் செலுத்து. முடிந்த அளவுக்கு போட்டியை பிரித்துக்கொள். இறுதியில் பவுண்டரிகளை அடித்துக்கொள்ளலாம்’ என அறிவுரைக் கூறினார். அது எனக்கு மிகவும் உதவியது.

எப்படியும் இந்தியர்கள் 2 ஃபீல்டர்களை உள்ளே கொண்டுவருவார்கள் என எனக்குத் தெரியும். இன்று எல்லாமே எனக்கு நினைத்தபடி நடந்தது என்றார்.

summary

West Indies captain who won the Player of the Match award Shai Hope turns to Dhoni's mantra to blossom at the death

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments