துலீப் கோப்பை: அரையிறுதிக்கான நம்பிக்கையை உயர்த்திய முஷீர் கான் - ருதுராஜ்!
துலீப் கோப்பையில் மேற்கு மற்றும் வடக்கு மண்டல அணிகளுக்கான காலிறுதிப் போட்டி குறித்து...
துலீப் கோப்பையில் ருதுராஜ் தலைமையிலான மேற்கு மற்றும் கன்னையா தலைமையிலான வடக்கு மண்டல அணிகளுக்கான காலிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.
பெங்களூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் வடக்கு மண்டல அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மேற்கு மண்டல அணி தனது முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, வடக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Advertisement
Advertisement
காலிறுதிப் போட்டியில் வெல்ல, 287 ரன்கள் தேவையான நிலையில் மூன்றாம் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் மேற்கு மண்டல அணி சார்பாக முஷீர் கான் 96 ரன்கள் எடுத்து அசத்தினார். கேப்டன் ருதுராஜ் 66 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இன்னும் 67 ரன்கள் தேவையாக இருக்கின்றன.
ஷர்துல் தாக்குர், தனுஷ் கோட்டியான் பேட்டிங் ஆடுவார்கள். உர்வில் படேலும் ஆட்டமிழக்காமல் 17 ரன்களுடன் இருப்பதால் அந்த அணி வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதும் கவனிக்கத்தக்கது.
Duleep Trophy: Musheer Khan and Ruturaj boost semi-final hopes!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.