யு19 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நிதானமான பேட்டிங்!
யு19 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி குறித்து...
யு19 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
31 ஓவர்கள் முடிவில் 147/2 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
Advertisement
Advertisement
முதல் அரையிறுதியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தற்போது களத்தில் ஃபைசல் ஷினோஜடா 58 உசைருல்லாஹ் நியாசாய் 16 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
இந்தியா சார்பில் கனிஷ்க் சௌஹான், தீபேஷ் தேவேந்திரன் தலா 1 விக்கெட் எடுத்துள்ளார்கள்.
In the second semi-final match of the U19 World Cup, Afghanistan, after winning the toss, is currently batting.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.