டி20 உலகக் கோப்பையில் இடம் கிடைத்த ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஐசிசிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்தப் போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
வங்கதேச அணி இந்தியாவில் விளையாட தொடர்ச்சியாக மறுத்ததால் டி20 உலகக் கோப்பையிலிருந்து நீக்கப்பட்டது. அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கூறியதாவது:
டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான அழைப்பிதலை ஐசிசியின் தலைவர் ஜெய் ஷாவிடம் இருந்து இன்று காலை எனக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன்.
அணியின் சார்பாக இந்த அழைப்பை ஏற்பதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு ஐசிசிக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.