FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

300-வது சர்வதேச போட்டியில் ஸ்மிருதி மந்தனா அசத்தல்!

இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தனது 300-வது சர்வதேசப் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

Updated On : 10 ஜூலை 2026, 6:34 pm IST
ஸ்மிருதி மந்தனா - படம் | பிசிசிஐ
பகிர்:

இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தனது 300-வது சர்வதேசப் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் திடலில் முதல் முறையாக மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

Advertisement

Advertisement

மதிய உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா களத்தில் விளையாடி வருகின்றனர்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 300-வது சர்வதேச போட்டியாகும். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

உணவு இடைவேளையின்போது, ஸ்மிருதி மந்தனா 67 பந்துகளில் 56 ரன்கள எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Indian team vice-captain Smriti Mandhana impressed by scoring a half-century in her 300th international match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments