FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

சக வீராங்கனையுடன் உறவு; ஏமாற்றம்: ஆஷ்லி கார்ட்னர் மீது மனைவி குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஆஷ்லி கார்ட்னர் மீது அவரது மனைவி வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து...

Updated On : 15 ஜூலை 2026, 6:37 pm IST
மனைவியுடன் ஆஷ்லி கார்ட்னர் (வலது). ஜார்ஜியா ஹோல் (இடது புறம் கீழே). - படங்கள்: இன்ஸ்டா / ஆஷ்லி கார்ட்னர், ஜார்ஜியா ஹோல்.
பகிர்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையும் துணைக் கேப்டனுமான ஆஷ்லி கார்ட்னர் (29 வயது) தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அணியில் இருக்கும் சக வீராங்கனையுடன் உறவில் இருப்பதாகவும் அவரது நட்புமுறிவுற்ற மனைவி மோனிகா ரைட் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆஷ்லி கார்ட்னர் கடந்த 2020ல் மோனிகா ரைட் உடன் பழக ஆரம்பித்து, 2024ல் நிச்சயதார்த்தம் நடந்து, 2025ல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், நவம்பர் 2025ல் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், ஆஷ்லி கார்ட்னர் சக வீராங்கனை ஜார்ஜியா ஹோல் (22 வயது) உடன் உறவில் இருப்பதகாக் கூறப்படுகிறது. இதனை மோனிகா ரைட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

மோனிகா ரைட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் ஜார்ஜியா ஓல் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எனது மனைவி என்னை ஏமாற்றக் காரணம் இவர்தான்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக டெய்லி மெய்ல் என்ற ஊடகத்தில் ஆஷ்லி கார்ட்னர் தன்னுடைய திருமண மோதிரத்தை கழற்றிவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதனைப் பகிர்ந்த மோனிகா ரைட், “இது சரியாக இல்லை. என்ன நடந்தது என்று நான் முழுமையாகக் கூறுகிறேன்” எனக் கூறி ஜார்ஜியா வோல் பதிவையும் கூறியிருந்தார்.

இதுவரை ஆஷ்லி கார்ட்னர், ஜார்ஜியோ வோல் இதற்கு மறுப்போ விளக்கமோ அளிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மோனிகாவும் கார்ட்னரும் குழந்தைப் பெறவிருந்ததும் பின்னர் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பரில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின்போதுதான் இந்த புதிய உறவு ஏற்ப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஷ்லி கார்ட்னர் 2018, 2020, 2023, 2026 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய டி20 அணியிலும், நியூசிலாந்தில் 2022 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸி. ஒருநாள் அணியிலும் இடம்பிடித்திருந்தார்.

summary

'This is who my wife cheated on me with': Ashleigh Gardner's estranged wife Monica Wright accuses her of having affair with teammate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments