FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய டி20 அணி!

இந்திய டி20 கிரிக்கெட் அணி மீண்டும் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது குறித்து...

Updated On : 26 ஜூலை 2026, 3:25 pm IST
இந்திய டி20 கிரிக்கெட் அணி - பிசிசிஐ
பகிர்:

இந்திய டி20 கிரிக்கெட் அணி மீண்டும் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என வென்றுள்ளது. இதனால், ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்திய டி20 அணி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அயர்லாந்துடன் 0-2, இங்கிலாந்துடன் 0-4 என தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து அதிர்ச்சி அளித்தது. இதனால், ஐசிசி தரவரிசையிலும் கீழிறங்கியது.

Advertisement

Advertisement

ஜிம்பாப்வே உடன் வென்று தற்போது மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தத் தொடருக்கு முன்பாக பலரும் அச்சத்தில் இருந்ததும் கவனிக்கத்தக்கது.

இந்திய பேட்டர்களில் இஷான் கிஷன் டி20 தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் அரைசதம் அடித்திருந்தார்.

டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 2024, 2026ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது. அடுத்து 2026 உலகக் கோப்பையும் வென்று வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

summary

India reclaim top spot in ICC T20I rankings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments