முகப்பு
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய டி20 அணியில் இந்திய வம்சாவளி வீரர்... யார் இந்த நிகில் சௌத்ரி?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் சௌத்ரி ஆஸ்திரேலிய டி20 அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 11 ஜூன் 2026, 3:10 pm IST
நிகில் சௌத்ரி.
பகிர்:

டாஸ்மேனியா, ஹோபார்ட் ஹாரிகேன்ஸ் அணிகளுக்காக விளையாடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் சௌத்ரி ஆஸ்திரேலிய டி20 அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றதுடன் 1-0 கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது. வங்கதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் ஜூன் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மூன்றாவது இந்த தொடருக்கான அணியையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

இந்த அணியில் டாஸ்மேனியா, ஹோபார்ட் ஹாரிகேன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள நிகில் சௌத்ரி, காயம் காரணமாக விலகிய அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டுக்கு மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

30 வயதான நிகில் சௌத்ரி, இந்தியாவில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே ஆகிய தொடர்களிலும் விளையாடிய அனுபவம் பெற்றவர். இவர் 2017 - 2019 இடைப்பட்ட காலகட்டத்தில் பஞ்சாப் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தில்லியில் பிறந்த நிகில் சௌத்ரி, ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்வதற்கு முன்பு இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். அவர் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற முன்னணி வீரர்களுடன் இணைந்து விளையாடியுள்ளார்.

கரோனா தொற்றுக்குப் பின்னர் 2020 ஆம் ஆண்டு தனது மாமாவைப் பார்ப்பதற்காக ஆஸ்திரேலியா சென்ற நிகில் சௌத்ரி, அதன்பின்னர் அங்கு கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அவரிடம் 2027 ஆம் ஆண்டு வரை செல்லக்கூடிய தற்காலிக விசா மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவரை அணியில் விளையாடு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு இன்னும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படவில்லை. அவரிடம் குடியுரிமை இல்லாவிட்டாலும், ஆஸ்திரேலியாவில் ஐந்து ஆண்டுகள் வசித்திருக்கிறார். ஐசிசி விதிகளின்படி தேசிய அணிக்காக விளையாட அந்த நாட்டில் 5 ஆண்டுகள் தங்கியிருந்தால் போதுமானதாகக் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய கடைசி இந்திய வம்சாவளி வீரர் ரெக்ஸ் செல்லர்ஸ். இவர் 1964-ல் கொல்கத்தாவில் தனது ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய லெக்ஸ்பின்னர். அவருக்குப் பின்னர் நிகில் சௌத்ரி ஆஸ்திரேலிய அணியில் விளையாடவிருக்கிறார். அதேபோன்று, புணேவில் பிறந்த முன்னாள் ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் லிசா ஸ்தலேகர், ஒருநாள், டெஸ்ட், டி20 என 187 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

summary

India-born Nikhil Chaudhary called into Australia T20 squad as a replacement for the rested Travis Head

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.