FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மும்பை இந்தியன்ஸ் தீபாவளி வாழ்த்து போஸ்டரில் இடம்பெறாத ஹார்திக் பாண்டியா! அணியில் தொடர்வாரா?

மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து போஸ்டரில் ஹார்திக் பாண்டியா இடம்பெறாதது குறித்து...

11 வினாடிகள் முன்பு
மும்பை இந்தியன்ஸ் அணியின் தீபாவளி போஸ்டர். - படம் - எக்ஸ்
பகிர்:

மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து போஸ்டரில் ஹார்திக் பாண்டியா இடம்பெறாதது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நாடு முழுவதும் இன்று (நவ. 8) தீபாவளி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு போஸ்டரில் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட ஆடவர் மற்றும் மகளிர் அணியின் முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

ஆனால், கடந்த சீசனில் அணியின் கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியாவின் புகைப்படம் அந்த போஸ்டரில் இடம்பெறவில்லை.

ஏற்கெனவே, மும்பை அணியானது ஹார்திக் பாண்டியாவை ஐபிஎல் 2027 மெகா ஏலத்திற்கு முன்பு, மற்ற அணிக்கு டிரேடிங் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இந்தப் போஸ்டரில் ஹார்திக் பாண்டியா இடம்பெறாதது வரும் சீசனில் மும்பை அணியில் ஹார்திக் பாண்டியா தொடரமாட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

summary

The absence of Hardik Pandya from the Diwali greeting poster released by the Mumbai Indians has become a topic of discussion on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.