நியூசி.க்கு எதிரான தொடரில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உதவும்: ஆகிப் நபி
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட உள்ளூர் போட்டிகளில் கிடைத்த அனுபவம் உதவியாக இருக்கும் என வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட உள்ளூர் போட்டிகளில் கிடைத்த அனுபவம் உதவியாக இருக்கும் என வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் தங்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்தத் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பந்துவீச்சு வேகத்தை அதிகப்படுத்துவது உதவியாக இருக்கும். ஆனால், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அதைவிட உதவியாக இருக்கும் என வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீச்சில் வேகம் இருப்பது மிகவும் நல்லது. ஆனால், நான் என்னுடைய திறமையை மிகவும் நம்புகிறேன். உள்ளூர் கிரிக்கெட்டில் நான் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட நம்பிக்கையுடன் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறேன். பந்துவீச்சில் வேகத்தை அதிகப்படுத்துவது சிறப்பாக செயல்படுவதற்கான கூடுதல் காரணியாக அமையும். ஆனால், நான் என்னுடைய திறமையை நம்புகிறேன். உள்ளூர் கிரிக்கெட் அனுபவம் எனக்கு கைகொடுக்கும் என்றார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நாளை (நவம்பர் 13) நடைபெறுகிறது.