FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாட் ஹென்ரி மாஸ்டர்கிளாஸ்: முதல் ஓவரிலேயே ரோஹித், கோலி, ஷ்ரேயாஸ் டக் அவுட்!

நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்ரியின் மாஸ்டர்கிளாஸ் குறித்து...

பந்துவீச்சாளர் மாட் ஹென்ரி - படம்: எக்ஸ் / பிளாக்கேப்ஸ்
பகிர்:

நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்ரி முதல் ஓவரிலேயே தனது மாஸ்டர்கிளாஸ் பந்துவீச்சை நிகழ்த்தியுள்ளார்.

முதல் பந்தில் ரோஹித் சர்மா கோல்டன் டக் ஆனார். அடுத்ததாக விராட் கோலி ஐந்தாவது பந்திலும் ஸ்ரேயாஷ் ஐயர் கடைசி பந்திலும் ஆட்டமிழந்தார்கள்.

Advertisement

Advertisement

இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 333 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில் யங் 125 ரன்கள் குவித்தார்.

அடுத்து பேட்டிங் செய்துவரும் இந்திய அணி முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோஹித், கோலி, ஸ்ரேயாஷ் ஐயர் டக் அவுட் ஆனார்கள்.

நியூசிலாந்தின் மாட் ஹென்றி மிரட்டலான பந்துவீச்சை வீசியுள்ளார். முன்னதாக ஒருநாள் உலகக் கோப்பையில் இதேபோல இந்தியாவுக்கு அவர் அச்சுறுதலான பந்துவீச்சை வீசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

தற்போது, 5.3ஆவது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் கைல் ஜேமிசன் ஆட்டமிழந்தார். 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

summary

Matt Henry takes 3 wickets in the first over..! Rohit, Kohli, and Shreyas all out for ducks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.