FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக்குக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் ரசிகர்கள்!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்கள் தனக்கு ஆதரவளித்ததாக வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் தெரிவித்துள்ளார்.

வீரேந்திர சேவாக், ஆர்யவீர் சேவாக் - படங்கள்: பிடிஐ, பிசிசிஐ
பகிர்:

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்கள் தனக்கு ஆதரவளித்ததாக வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisement

Advertisement

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஆர்யவீர் சேவாக் 5 போட்டிகளில் 361 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்கள் தனக்கு ஆதரவளித்ததாக ஆர்யவீர் சேவாக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தன்னுடைய மகன் ஆர்யவீர் சேவாக்குக்கு விடியோ கால் மூலம் பேசியபோது, ஆர்யவீர் சேவாக் இதனை தெரிவித்துள்ளார்.

ஆர்யவீர் சேவாக் விடியோ அழைப்பில் பேசியதாவது: எனக்கு கை மூட்டில் அடிபட்டபோது, இரண்டு அல்லது மூன்று முறை திடலுக்குள் மருத்துவர் வந்தார். போட்டியைக் காண கிட்டத்தட்ட 2000 பாகிஸ்தான் ரசிகர்கள் கேலரியில் இருந்தனர். அவர்கள் எனக்கு கையில் அடிபட்டபோது, சேவாக், சேவாக் என முழக்கமிட்டு என்னைத் தொடர்ந்து பேட் செய்ய ஆதரவளித்தார்கள் என்றார்.

இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்தபோது, மோஹித் உல்வா மற்றும் மனல் சௌகான் சிறப்பாக விளையாடி போட்டியை இந்திய அணியின் பக்கம் திருப்பினர். கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆர்யவீர் சேவாக் தொடர்ந்து சீதா ராம் என உச்சரித்துக் கொண்டிருந்தார்.

வீரேந்திர சேவாக் பகிர்ந்துள்ள இந்த விடியோ கால் அழைப்பு விடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Virender Sehwag's son, Aryavir Sehwag, has stated that Pakistani fans supported him during the Asia Cup final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.