போலி போக்சோ வழக்கு: சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 போலீசார் பணியிடை நீக்கம்
போலி போக்சோ வழக்குப் பதிவு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், 2 போலீசார் பணியிடை நீக்கம் குறித்து...
சென்னை: சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலி போக்சோ வழக்குப் பதிவு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்த் ராஜா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் கண்ணா, மேட்ரிமோனி மூலம் திருமணத்துக்கு பெண் தேடியதாகவும், நெய்வேலி பெண்ணிடம் தனது வயதை மறைத்து திருமண பேச்சு நடத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
சுரேஷ் கண்ணாவுக்கு 40 வயது எனத் தெரிந்ததும் திருமணப் பேச்சை பெண் நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கண்ணா, பழிவாங்குவதற்காக பெண்ணின் தம்பி மீது சென்னையை சேர்ந்த 2 சிறுமிகளுக்கு மொத்தம் ரூ.6 லட்சம் பணம் கொடுத்து ஹனிட்ராப் செய்தாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் காவலர் வசந்த ராஜா மூலம் ஆய்வாளர் விஜயலட்சுமியை தொடர்கொண்ட சுரேஷ் கண்ணா, ரூ.5.50 லட்சம் பணம் கொடுத்து, பொய்யாக போக்சோ வழக்குப் பதிவு செய்ததாக இருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்த் ராஜா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சம்பவம் சென்னை மாநகர காவல் ஆணையர் உள்பட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.