தொடரை வெல்லுமா இந்தியா? கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு!
இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு செய்துள்ளதைப் பற்றி...
இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்கனு பே ஓவலில் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடரை வெல்லும் கட்டாயத்தில் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் இறங்கியுள்ளன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்டனர், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றிக்கு ஓய்வளிக்கப்பட்டு, டஃபி மற்றும் டிக்னர் இருவரும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்திய அணியில் குர்னூர் பிராருக்கு ஓய்வளிக்கப்பட்டு, முகமது சிராஜ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் யாஷ் தாக்குர் முதல் முறையாக வாய்ப்பை பெற்றுள்ளார். அவருக்கான தொப்பியை அக்ஷர் பட்டேல் வழங்கி அவரை கௌரவித்தார்.
இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், நமன் திர், ஆகிப் நபி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யாஷ் தாக்கூர்.
நியூசிலாந்து அணி விவரம் வில் யங், டிம் செய்ஃபர்ட்(விக்கெட் கீப்பர்), நிக் கெல்லி, டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கிறிஸ்டியன் கிளார்க், பிளேயர் டிக்னர், ஜேக்கப் டஃபி, ஃபிஷர்.
New Zealand won the toss and elected to bowl in the fifth and final ODI against India.