பொங்கல் பண்டிகை: சில நிமிஷங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்கள்!
பொங்கல் பண்டிகையொட்டி, தொடங்கிய சில நிமிஷங்களிலேயே ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததைப் பற்றி...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாண்டியன், வைகை உள்ளிட்ட பெரும்பாலான விரைவு ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்தன.
அடுத்தாண்டு (2027) ஜன.15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. ஜன. 14-ஆம் தேதி போகி, 16-ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ஆம் தேதி காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் அடுத்தடுத்து உள்ளன.
Advertisement
Advertisement
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் பணியாற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக ரயில்களில் 60 நாள்கள் முன்னே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அதன்படி, ஜன.14-ஆம் தேதி சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) காலை 8 மணிக்கு ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும், ரயில் நிலையங்களில் வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான ஐஆர்சிடிசி இணையதளம் வழக்கம் போல முடங்கிய நிலையில், சிறிது நேரத்தில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் 2-ஆம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளிலும், வந்தே பாரத், வைகை விரைவு ரயிலில் 2-ஆம் சிட்டிங், சிசி உள்ளிட்ட இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிஷங்களுக்குள் விற்றுத்தீர்ந்தன. சில ரயில்களுக்கான முன்பதிவில் ரெக்ரெட் வந்ததால் பலரும் வருத்தத்துக்குள்ளாகினர்.
In anticipation of the Pongal festival, reserved tickets for most express trains—including the Pandian and Vaigai expresses—sold out within just a few minutes.