FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணையும் முகமது ஷமி?

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகமது ஷமி (எக்ஸ்) - படம் | லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எக்ஸ்)
பகிர்:

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி, ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அடுத்தாண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக ஐபிஎல் மினி ஏலம் கோவாவில் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரண் லக்னௌ அணியில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த டிரேடிங் உறுதி செய்யப்பட்டால், ஜோஃப்ரா ஆர்ச்சருடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிரதான பந்துவீச்சாளராக முகமது ஷமியும் இணைவார்.

லக்னௌ அணியில் இணையும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக விளையாடிய வீரராக சாம் கரண் மாறுவார். இதற்கு முன்பாக, அவர் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தாலும், காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம் கரண் விளையாடவில்லை.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சாம் கரணுக்காக முகமது ஷமி மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் எம்.சித்தார்த்தையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

summary

Reports suggest that Indian fast bowler Mohammed Shami is set to join the Rajasthan Royals through a trade.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.