முகப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கே.எல். ராகுல்!

இந்திய தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளதைப் பற்றி...

54 வினாடிகள் முன்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கே.எல். ராகுல்!
கே.எல். ராகுல்.
பகிர்:

இந்திய தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 175* ரன்களையும், கிளென் பிலிப்ஸ் 118 ரன்களையும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Advertisement

Advertisement

அதனைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 39 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன்களில் ஆட்டமிழக்க கே.எல். ராகுல் 52 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

இந்தத் தொடரில் கே.எல். ராகுல் விளாசிய அரைசதம் அவருக்கு 22-ஆவது அரைசதமாகவும் அமைந்தது. இந்தப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம், கே.எல். ராகுல் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

செனா (SENA) நாடுகள் என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட்களில் அரைசதம் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

2014-ஆம் ஆண்டில் மெல்போர்ன் கிரிக்கெட் திடலில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான அவர் எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களை அடித்துள்ளார்.

இங்கிலாந்தில் 13 போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் நான்கு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்களை விளாசியுள்ளார். மேலும், தென்னாப்பிரிக்காவில் 5 டெஸ்ட் போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், ஒரு அரைசதத்தையும் அடித்துள்ளார்.

summary

 KL Rahul contributed with a knock of unbeaten 52 runs, and it helped him enter his name in the record books.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.