முகப்பு

டெஸ்ட்டில் அதிக சிக்ஸர்கள்: மெக்கல்லம் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

இந்திய வீரர் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்கல்லம் சாதனையை முறியடித்தது குறித்து...

2 வினாடிகள் முன்பு
டெஸ்ட்டில் அதிக சிக்ஸர்கள்: மெக்கல்லம் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
ரிஷப் பந்த் சிக்ஸர் அடிக்கும் காட்சி - படம்: எக்ஸ் / பிசிசிஐ
பகிர்:

இந்திய விக்கெட் கீப்பட் பேட்டர் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிகஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில், முன்னாள் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் சாதனையை முந்தியுள்ளார்.

வெலிங்டனில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட்டில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இதில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 368 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 720/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடித்தார்.

Advertisement

Advertisement

சதம் அடிக்கும்போது சிக்ஸர் அடித்தார். இத்துடன் நான்காவது முறையாக இவர் இந்த மாதிரி சதம் அடித்துள்ளார். இதுபோல செய்ததில் ரிஷப் பந்த் இரண்டாமிடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் சச்சின் (10 முறை) இருக்கிறார்.

டெஸ்ட்டில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் பிரண்டன் மெக்கலமை முந்தி, இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார்.

டெஸ்ட்டில் அதிக சதங்கள்

1. பென் ஸ்டோக்ஸ் - 138 சிக்ஸர்கள் (122 போட்டிகள்)

2. ரிஷப் பந்த் - 107 சிக்ஸர்கள் (101 போட்டிகள்)

3. பிரண்டன் மெக்கல்லம் - 104 சிக்ஸர்கள் (53 போட்டிகள்)

4. ஆடம் கில்கிறிஸ்ட் - 100 சிக்ஸர்கள் (96 போட்டிகள்)

5. கிறிஸ் கெயில் - 98 சிக்ஸர்கள் (103 போட்டிகள்)

6. டிம் சௌதி - 98 சிக்ஸர்கள் (107 போட்டிகள்)

summary

Most sixes in Tests: Rishabh Pant breaks McCullum's record!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.