முகப்பு

உலகில் எங்கு விளையாடினாலும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்: ரிஷப் பந்த்

உலகில் எங்கு விளையாடினாலும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

18 வினாடிகள் முன்பு
உலகில் எங்கு விளையாடினாலும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்: ரிஷப் பந்த்
ரிஷப் பந்த் - படம் | பிசிசிஐ
பகிர்:

உலகில் எங்கு விளையாடினாலும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 368 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 720 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம், இந்திய அணி 352 ரன்கள் என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது.

இந்திய அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சதம் விளாசி அசத்தினர். கே.எல்.ராகுல் 136 ரன்களும் (9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ரிஷப் பந்த் 128 ரன்களும் (10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உலகில் எங்கு விளையாடினாலும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவதாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு நிறைய சிக்ஸர்கள் விளாச வேண்டும் என்ற இலக்கு இருந்தது. ஆனால், தற்போது என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் அதிக சிக்ஸர்கள் விளாசுவது குறித்து யோசிப்பதில்லை. உலகில் எங்கு விளையாடினாலும் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறேன்.

நியூசிலாந்தில் எனது முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நியூசிலாந்தில் சதம் விளாச வேண்டும் என்பதை எதிர்நோக்கி காத்திருந்தேன். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. பல தருணங்களில் நான் சிக்ஸர் அடித்து சதம் விளாச முயற்சித்து ஆட்டமிழந்துள்ளேன். அதனால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சரியான பந்தில் சிக்ஸர் விளாசி சதத்தைப் பதிவு செய்தேன் என்றார்.

summary

India's wicketkeeper batsman Rishabh Pant has said that he wants to make an impact wherever he plays in the world.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.