முகப்பு

குல்தீப் யாதவ், மானவ் சுதர் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை; சௌரவ் கங்குலி கேள்வி!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதர் சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.

குல்தீப் யாதவ், மானவ் சுதர் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை; சௌரவ் கங்குலி கேள்வி!
குல்தீப் யாதவ் - (கோப்புப் படம்)
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் அல்லது மானவ் சுதர் சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையே வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று (நவம்பர் 23) கிளன் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செலின் வலுவான தடுப்பாட்டத்தால் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் அல்லது மானவ் சுதர் சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரிலும் நன்றாக விளையாடுகிறது. இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது.

ஆனால், போட்டியில் நாள்கள் செல்ல செல்ல மாற்றமடையும் வெளிநாட்டு ஆடுகளங்களில் வெற்றி பெற சிறப்பான ஸ்பின்னர்கள் அணியில் வேண்டும் என்பதை அணி நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். வாஷிங்டன் சுந்தர் ஆல்ரவுண்டராக விளையாட முடியும். ஆனால், குல்தீப் யாதவ் அல்லது மானவ் சுதர் எங்கே? எனப் பதிவிட்டுள்ளார்.

தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற குல்தீப் யாதவ், பின்னர் விலகினார். அவருக்குப் பதிலாக அணியில் அன்ஷுல் கம்போஜ் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.

இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய மானவ் சுதர் அணியில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

summary

Former Indian captain Sourav Ganguly has questioned the exclusion of Kuldeep Yadav and Manav Suthar from the Indian squad for the Test series against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.