முகப்பு

போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.

57 வினாடிகள் முன்பு
போட்டியை  டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்!
- படம் | பிசிசிஐ
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையே வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று (நவம்பர் 23) கிளன் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செலின் வலுவான தடுப்பாட்டத்தால் போட்டி டிராவில் முடிவடைந்தது.

நியூசிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்திருந்தபோது, போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. கடைசி நாள் ஆட்டம் நிறைவடைய ஒரு மணி நேரம் மீதமிருந்தும் போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளம் பந்துவீச்சுக்கு பலனளிப்பதாக இருந்திருந்தால் ஆட்டத்தை தொடர்ந்திருக்கலாம். வேகப் பந்துவீச்சாளர்கள் சோர்வடைந்துவிட்டார்கள். அவர்கள் கிட்டத்தட்ட 50 ஓவர்கள் வீசிவிட்டனர். அடுத்த மூன்று நாள்களில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இருக்கிறது. ஒருநாள் பயணம் செய்ய வேண்டியுள்ளது என்பதால், போட்டியை டிரா செய்ய ஒப்புக்கொண்டோம். அடுத்தப் போட்டிக்கு பந்துவீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பது மிகவும் முக்கியம். இன்னும் 5 அல்லது 10 ஓவர்கள் வீசவைப்பதால் உண்மையில் போட்டியில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கவில்லை.

இந்த ஆடுகளத்தில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது மிகவும் சவாலாக இருக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது. ஆனால், எங்களுக்கு ஒன்றிரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஃபீல்டிங்கில் பெரிதாக தவறுகள் ஒன்றும் செய்யவில்லை என்றார்.

summary

Indian team captain Shubman Gill has explained why they agreed to end the first Test match against New Zealand in a draw.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.