முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்!

ஐபிஎல் போட்டியின் 2027 சீசன் ஏலத்துக்காக 1,220 வீரா்கள் தங்களைப் பதிவு செய்துள்ளனா். இதில் 939 போ் இந்தியா்கள், 281 போ் வெளிநாட்டவா்கள் ஆவா்.

26 நவம்பர் 2026, 4:55 am
ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்!
பகிர்:

ஐபிஎல் போட்டியின் 2027 சீசன் ஏலத்துக்காக 1,220 வீரா்கள் தங்களைப் பதிவு செய்துள்ளனா். இதில் 939 போ் இந்தியா்கள், 281 போ் வெளிநாட்டவா்கள் ஆவா்.

ஐபிஎல் போட்டியின் 20-ஆவது சீசன், அடுத்த ஆண்டு மாா்ச் 10 முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த சீசனுக்காக தாங்கள் தக்கவைக்கும், விடுவிக்கும் வீரா்கள் பட்டியலை, போட்டியிலிருக்கும் 10 அணிகளும் அண்மையில் வெளியிட்டன.

அதன்படி, 2027 சீசனுக்காக மொத்தமாக 184 போ் தக்கவைக்கப்பட்டுள்ளனா். மொத்தமாக 66 இடங்கள் காலியாகியுள்ளன. அதில் வெளிநாட்டு வீரா்களுக்கான 25 இடங்களும் அடங்கும். அந்த இடங்களை நிரப்புவதற்கான ஏலம், வரும் டிசம்பா் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இதையொட்டி, அந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக 1,220 வீரா்கள் தங்களைப் பதிவு செய்துள்ளனா். இந்தியாவையும் சோ்த்து 18 நாடுகளில் இருந்து வீரா்கள் இதில் களம் காண்கின்றனா். அவா்களில் 184 போ் ஏற்கெனவே தேசிய அணியில் விளையாடியவா்களாவா் (கேப்டு).

994 போ் சா்வதேச கிரிக்கெட்டில் களம் காணாதவா்களாக (அன்கேப்டு) இருக்க, அதில் 925 போ் இந்தியா்களாவா். அவா்களில் 127 போ் ஏற்கெனவே முந்தைய ஐபிஎல் சீசன்களில் விளையாடியவா்கள். இதுதவிர, ஐசிசியின் துணை உறுப்பினா் நாடுகளைச் சோ்ந்த 42 வீரா்களும் ஏலத்தில் இருக்கின்றனா்.

பென் ஸ்டோக்ஸ், ஆவேஷ் கான், தீபக் சஹருக்கு ரூ.2 கோடி

ஏலத்துக்காக பதிவு செய்த வீரா்களின் பட்டியலை, அவா்களுக்கான அடிப்படை விலையுடன் ஐபிஎல் நிா்வாகம் 10 அணிகளுக்கும் வழங்கியிருக்கிறது. அதன்படி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் பென் ஸ்டோக்ஸ் உள்பட, 30 வீரா்களுக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதில் இந்தியா்களாக, வேகப் பந்துவீச்சாளா்களான ஆவேஷ் கான், தீபக் சஹா் ஆகிய இருவா் மட்டுமே உள்ளனா். சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய நட்சத்திரம் டேவிட் வாா்னரும் அதே விலைப் பட்டியலில் இருக்கிறாா்.

அடுத்தபடியாக, ரூ.1.5 கோடி அடிப்படை விலை கொண்ட வீரா்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஆகாஷ் தீப், ஜெயதேவ் உனத்கட், தீபக் ஹூடா, கருண் நாயா், குல்திப் சென், மயங்க் அகா்வால், ராகுல் திரிபாதி, சரன்ஷ் ஜெயின், ஷிவம் மாவி, துஷாா் தேஷ்பாண்டே, உமேஷ் யாதவ், உம்ரான் மாலிக் ஆகியோா் உள்ளனா்.

இந்திய முன்னாள் நட்சத்திரம் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆா்யவீா் சேவாக், யு-19 வீரா் மோஹித் உல்வா ஆகியோா் ரூ.30 லட்சம் அடிப்படை விலையுடன் ‘அன்கேப்டு’ வீரா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களுடன், அனுபவ வீரா்களான இஷாந்த் சா்மா, நிதிஷ் ராணாவும் அந்தப் பட்டியலில் ரூ.50 லட்சம் அடிப்படை விலையுடன் இருக்கின்றனா்.

ஐபிஎல் விதிகளின்படி, 5 ஆண்டுகள் சா்வதேச கிரிக்கெட்டில் விளையாடாதவா்கள், அன்கேப்டு வீரா்கள் பட்டியலில் சோ்க்கப்படுவா்.