முகப்பு

4 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் மினி ஏலத்தில் பெயரைப் பதிவு செய்த பென் ஸ்டோக்ஸ்!

4 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் மினி ஏலத்தில் பெயரைப் பதிவு செய்துள்ள பென் ஸ்டோக்ஸை பற்றி...

47 வினாடிகள் முன்பு
4 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் மினி ஏலத்தில் பெயரைப் பதிவு செய்த பென் ஸ்டோக்ஸ்!
பென் ஸ்டோக்ஸ்.
பகிர்:

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் மினி ஏலத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த மூன்று சீசன்களாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம், இந்தாண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 10 ஐபிஎல் அணி நிர்வாகங்கள் பங்கேற்கவுள்ளன. ஏலத்துக்கு முன்பாக அணிகள் அனைத்தும் வீரர்களை தக்கவைப்பதற்கும், விடுவிப்பதற்கும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்றது. அனைத்து அணிகளும் தங்கள் வீரர்கள் பட்டியலை நவ. 17 ஆம் தேதி அறிவித்தனர்.

அதன்படி, கோவாவில் நடைபெறும் மினி ஏலத்தில் 10 அணிகளுக்கு மொத்தம் 66 வீரர்கள் தேவைப்படும் நிலையில், மொத்தம் ரூ. 297.95 கோடி தொகையை மீதம் வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

அதிகபட்சமாக லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ. 47.45 கோடியும், குறைந்தபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 8.75 கோடியும் மீதத் தொகை வைத்துள்ளனர்.

இந்த ஏலத்தில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் உள்பட 1,220 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். டிச. 1-ஆம் தேதிக்குள் இந்தப் பட்டியல் சுருக்கி வெளியிடப்படவிருக்கிறது.

3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் நடக்கவிருக்கும் மினி ஏலத்தில் ரூ. 2 கோடி என்ற அதிகபட்ச அடிப்படை விலைப் பிரிவில் 30 வீரர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டோக்ஸும் தனது பெயரை ரூ. 2 கோடி அடிப்படை விலையில் பதிவு செய்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் பங்கேற்று அதன்பின்னர் விலகியதால் அவருக்கு கடந்தாண்டு ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 2026 ஆம் மே மாதத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸ், 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற 'தி ஹன்ட்ரட்' தொடரில் காயம் அடைந்ததிலிருந்து எந்த டி20 போட்டியிலும் விளையாடவில்லை.

ஐபிஎல்-லில் மூன்று அணிகளுக்காக விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ், 2023-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் 2017 ஆம் ஆண்டில் புணே அணிக்காக ரூ.14.5 கோடிக்கு வாங்கப்பட்ட அதிக விலைமதிப்புமிக்க வீரராகவும் இருந்தார். அதே தொடரில் சதம் விளாசி அவர் அசத்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து 2023-ஆம் ஆண்டில், சென்னை அணி அவரை ரூ. 16.25 கோடிக்கு வாங்கியது, ஆனால், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடினார்.

summary

Former England captain Ben Stokes has registered for the 2027 Indian Premier League (IPL) auction, two years after opting out of the 2025 mega auction.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.