கோவாவில் டிச. 16-ல் ஐபிஎல் ஏலம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கோவாவில் நடைபெறும் ஐபிஎல் 2027 மினி ஏலம் பற்றி...
2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
கடந்த மூன்று சீசன்களாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம், இந்தாண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 10 ஐபிஎல் அணி நிர்வாகங்கள் பங்கேற்கவுள்ளன.
Advertisement
Advertisement
ஏலத்துக்கு முன்பாக அணிகள் அனைத்தும் வீரர்களை தக்கவைப்பதற்கும், விடுவிப்பதற்கும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்றது. அனைத்து அணிகளும் தங்கள் வீரர்கள் பட்டியலை நேற்று மாலை அறிவித்தனர்.
அதன்படி, கோவாவில் நடைபெறும் மினி ஏலத்தில் 10 அணிகளும் மொத்தம் 66 வீரர்கள் தேவைப்படும் நிலையில், மொத்தம் ரூ. 297.95 கோடி தொகையை மீதம் வைத்துள்ளனர்.
அதிகபட்சமாக லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ. 47.45 கோடியும், குறைந்தபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 8.75 கோடியும் மீதத் தொகை வைத்துள்ளனர்.
இந்த ஏலத்தில் பங்கேற்க 55 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 184 வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கோவாவில் வருகின்ற டிச. 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, டிச. 15 அன்று ஏலம் தொடர்பான விளக்கக் கூட்டம் அணி நிர்வாகங்களுக்கு நடைபெறவுள்ளது.