முகப்பு

முதல்முறையாக ஆடவர் - மகளிர் இணைந்து டி20 கிரிக்கெட் லீக்..! ஜாகீர் கான் அறிவிப்பு!

டி20 கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தியை அறிவித்திருக்கும் ஜாகீர் கான் குறித்து...

46 வினாடிகள் முன்பு
முதல்முறையாக ஆடவர் - மகளிர் இணைந்து டி20 கிரிக்கெட் லீக்..!  ஜாகீர் கான் அறிவிப்பு!
ஐபிஎல், டபிள்யூபிஎல் கோப்பைகளுடன் விராட் கோலி, ஸ்மிருதி மந்தனா. - படங்கள்: ஆர்சிபி
பகிர்:

டி20 கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் இனிப்பான நற்செய்தியை முன்னாள் இந்திய வீரரும் தற்போதைய சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளருமான ஜாகீர் கான் அறிவித்துள்ளார்.

ஜாகீர் கான் இணை உரிமையாளராக இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஏபி நிறுவனமும் ஜெர்மன் கிரிக்கெட் வாரியமும் இணைந்து 'ஈக்வல்' இரு பாலினரும் பங்கேற்கும் டி20 லீக் டி20 கிரிக்கெட் லீக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிளேயிங் லெவனில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக இணைந்து விளையாடுமாறு விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 பெண்களும் 5 ஆண்களும் இடம்பெறலாம். மொத்தமாக ஒரு அணியில் 18 பேர் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மொத்தமாக ஐந்து அணிகள் பங்கேற்கும் இதில் மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகள் அடுத்தாண்டு ஆகஸ்ட் முதல் நடைபெற இருக்கின்றன.

ஜெர்மன் கிரிக்கெட் வாரியத்துடன் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இது குறித்து ஜாகீர் கான் கூறியிருப்பதாவது:

மக்களை ஒன்றிணைக்கும் அபாரமான சக்தி கிரிக்கெட்டுக்கு இருக்கிறது. அவர்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. குறிப்பாக ஐரோப்பா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இதன் சந்தை மதிப்புக்கும் உதவும். இது எப்படி அதிகப்படியான பார்வையாளர்களைச் சென்றடைகிறது என்பதைப் பொறுத்து இதன் மதிப்பு உயரும்.

இந்த டி20 லீக் சமத்துவத்துக்கும் பாலின வேறுபாடுகளைக் கடந்து வாய்ப்பு அளிக்கும் நோக்கத்திற்கும் முக்கியமான தொடக்கமாக அமையும். விளையாட்டின் வளர்ச்சில் ஆடவர், மகளிர் இணைந்து பங்களிக்கும் நோக்குடன் இது உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தியாவில் ஆடவர்களுக்கு ஐபிஎல் மகளிருக்கு டபிள்யூபிஎல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஐரோப்பாவில் அறிமுகமாகும் இந்தப் போட்டிகள் இந்தியாவிலும் நடைபெறுமா என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

summary

Zaheer Khan, German Cricket Federation to launch mixed-gender T20 league Equal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.