முகப்பு

நாங்கள் பந்துவீச்சில் இன்னும் நன்றாக செயல்பட்டிருக்கலாம்: ஆகாஷ் தீப்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் இன்னும் நன்றாக செயல்பட்டிருக்கலாம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பந்துவீச்சில் இன்னும் நன்றாக செயல்பட்டிருக்கலாம்: ஆகாஷ் தீப்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் இன்னும் நன்றாக செயல்பட்டிருக்கலாம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (நவம்பர் 27) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் எடுத்துள்ளது. டாம் பிளண்டெல் 53 ரன்களுடனும், கிளன் பிலிப்ஸ் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், முதல் நாளில் இந்திய அணி நன்றாக பந்துவீசியதாகவும், பந்துவீச்சாளர்கள் இன்னும் நன்றாக செயல்பட்டிருக்கலாம் எனவும் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஆனால், நாங்கள் இன்னும் நன்றாக செயல்பட்டிருக்கலாம். நாங்கள் இன்று மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருந்தது பெரிதும் உதவியது. முதல் செஷனில் ஈரப்பதம் இருந்ததால், பந்தினை வேகமாக வீச முடியவில்லை. அதனால், எங்களால் பேட்டர்களுக்கு சவாலளிக்கும் விதமாக பந்துவீச முடியவில்லை.

உணவு இடைவேளைக்குப் பிறகு, பொறுமையுடன் சிறந்த பகுதிகளில் பந்துவீசினோம். எங்களுக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன. பந்து பழையதாக மாறியதும் பேட்டர்கள் நன்றாக விளையாடத் தொடங்கினர். அதனால் எங்களால் அவர்களுக்கு சவாலளிக்கும் விதமாக பந்துவீச முடியவில்லை. பொறுமையாக நல்ல பகுதிகளில் பந்துவீசினோம். நியூசிலாந்தில் கிட்டத்தட்ட ஒரு மாதம் இருப்பதால், இங்குள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு எங்களது பந்துவீச்சை மாற்றிக் கொண்டோம் என்றார்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், முதல் நாளின் கடைசி செஷனில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து பேட்டர்கள் ஒரு விக்கெட்டினை மட்டும் இழந்து 115 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

summary

Indian fast bowler Akash Deep has stated that the team could have performed better with the ball in the second Test match against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.