FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹார்திக் பாண்டியா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது: ஆகாஷ் அம்பானி

ஹார்திக் பாண்டியா குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி பேசியிருப்பதாவது...

ஆகாஷ் அம்பானி உடன் ஹார்திக் பாண்டியா - படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்
பகிர்:

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, “ஒரு கிரிக்கெட்டராகவும் தனி மனிதனாகவும் ஹார்திக் பாண்டியா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது” எனப் பேசியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் டிரேடிங் மூலம் மாறியுள்ளார். பஞ்சாபில் இருந்து அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸுக்கு மாறியுள்ளார்.

Advertisement

Advertisement

மும்பை இந்தியன்ஸில் ரூ. 16.35 கோடி ஊதியத்தில் இருந்த ஹார்திக் பாண்டியா, தற்போது பஞ்சாப் கிங்ஸில் ரூ. 18 கோடிக்கு இணைந்துள்ளார். மும்பை அணிக்காக 115 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை (2015, 2017, 2019, 2020) ஐபிஎல் கோப்பை வெல்லும் போது ஹார்திக் பாண்டியா அணியில் இருந்துள்ளார்.

பஞ்சாப் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது முந்தைய ஊதியமான ரூ. 18 கோடிக்கே மும்பை இந்தியன்ஸில் இணைந்துள்ளார். இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியிருப்பதாவது:

ஒரு கிரிக்கெட்டராகவும் தனி மனிதனாகவும் ஹார்திக் பாண்டியா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. அவருக்கு எல்லாமே சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹார்திக் பாண்டியாவிற்கு சில சிறப்பான தருணங்கள் இருக்கின்றன. கிரிக்கெட்டராக வளர்ந்து, உலக அரங்கில் தன்னை நிரூபித்து மீண்டும் மும்பைக்கு வந்து அணியை வழிநடத்தியுள்ளார்.

பாண்டியாவின் பங்களிப்பு, ஆற்றல், போட்டியிடும் உணர்வு களத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மதிப்புகளைக் கூட்டியுள்ளது எனக் கூறியுள்ளார்.

summary

I have great respect for Hardik Pandya: MI owner Akash Ambani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.